விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் கழிவு பட்டாசு குவியலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர் அருகே ஆமத்தூர் பகுதியைச் சேர்ந்த வைரமுத்துவுக்கு சொந்தமான பட்டாசு ஆலை குந்தலப்பட்டி கிராமத்தில் இயங்கி வருகிறது. இந்த ஆலையில் சனிக்கிழமை மாலையில் தொழிலாளர்கள் வேலை முடிந்து செல்லும் போது கழிவு பட்டாசுகளை ஒதுக்குபறமான பகுதியில் போட்டு வைத்துள்ளனர். அந்த கழிவு பட்டாசுகளில் ஞாயிற்றுக்கிழமை காலை 11.30 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டு வெடித்துச் சிதறியுள்ளது.
இதையடுத்து காட்டுப்பகுதியில் தானியக் கதிர் அறுவடை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதோடு, பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். அதையடுத்து, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் விரைந்து வந்து தண்ணீர் ஊற்றி தீயை அனைத்தனர். மேலும், இன்று விடுமுறை நாள் என்பதால் தொழிலாளர்கள் யாரும் பணியில் ஈடுபடாத காரணத்தால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.