முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியினர் தேர்தல் விதிமுறை மீறல்: தமிழிசை சவுந்திரராஜன்

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் 60 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு 40 ஆயிரத்திற்கு மேற்ட்டோர் உறுப்பினராக இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் 12 லட்சத்திற்கு அதிகமாகவும், இந்தியாவில் 4 கோடிக்கு மேலாகவும் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:37 AM
பகிர்:

தமிழக பாரதிய ஜனதா கட்சி சார்பில் 60 ஆயிரம் பூத் கமிட்டி அமைக்கப்பட்டு, உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது, நாள் ஒன்றுக்கு 40 ஆயிரத்திற்கு மேற்ட்டோர் உறுப்பினராக இணைந்து வருகின்றனர். தமிழகத்தில் 12 லட்சத்திற்கு அதிகமாகவும், இந்தியாவில் 4 கோடிக்கு மேலாகவும் உறுப்பினர்கள் சேர்ந்துள்ளனர்.

 தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்திற்கு, குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனக்கூறி ஒரு மாத காலமாகியும் இன்னும் பேச்சுவாத்தை நடத்தவில்லை. மின் வாரியத் துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.

 ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்காக, மின்வாரிய அலுவலர்களை ஆளும் கட்சியினர் மிரட்டி நன்கொடை வசூலில் ஈடுபட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 27 அமைச்சர்கள் முகாமிட்டு, அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர். அமைச்சர்கள் அனைவரும் ஸ்ரீரங்கத்தில் உள்ளதால் கோட்டை செயலற்று உள்ளது. அதிமுக ஆட்சியில் லஞ்சம் பல்வேறு வழிகளில் பரிமான வளர்ச்சி கண்டுள்ளது. 

  ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அங்கு, தேர்தல் விதி மீறல்கள் நடைபெற்று வருகிறது. அவற்றை, பாரதிய ஜனதா கட்சியினர் சேகரித்து தகவல் அறிக்கை தயாரித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம். திமுக, அதிமுக கட்சிகள் ஊழல் கட்சியாக உள்ளதால், இந்த கட்சிகளை புறக்கணிக்க, மக்கள் மவுனப்புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், ஊழற்ற ஆட்சி நடத்தும் பாரதிய ஜனதா கட்சிக்கு ஸ்ரீரங்கத்தில் உள்ள வாக்காளர்கள் வாக்களித்து கணிசமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறும் வாய்ப்புள்ளது.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை கலந்து ஆலோசித்த பின்னரே, பாஜக வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இதனால் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை ஆதரித்து, எங்களது கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் பிரச்சாரத்தில் ஈடுபடுவர்.

 இலங்கையில் புதிய அரசு அமைந்ததன் மூலம், தமிழர்களுக்கு நல்வாழ்வு கிடைத்துள்ளது. அங்கு, தமிழர்கள் மிகுந்த பாதுகாப்புடன் வாழும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள், அங்கு வாழ்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, இலங்கை அமைச்சர் வேலாயுதம் என்னை திங்கள்கிழமை சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகளை திரும்பி அழைக்க, இலங்கை அரசு முடிவு செய்துள்ளதை மத்திய அரசு வரவேற்றுள்ளது. அதற்காக, இலங்கை மற்றும் இந்திய அரசு அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை டில்லியில் நடைபெற்ற போது தமிழக அரசு சார்பில் பிரதிநிதி பங்கேற்காதது வருத்தம் அளிக்கிறது.

பிரதமர் மோடி கொண்டு வந்துள்ள ஜன்தத் திட்டத்தின் மூலம் 11 ஆயிரம் பேர் வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர். இதன் மூலம், ரூ. 9 ஆயிரம் கோடி சேமிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.

பேட்டியின்போது, தேசியக்குழு உறுப்பினர் எம். சிவசுப்ரமணியம், மாவட்டத் தலைவர் சி. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். 

முழு கட்டுரையைப் படிக்க →