தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து: 3 பேர் படுகாயம்

விருதுநகர் அருகே பாண்டியன்நகரை அடுத்த முத்தால்நகரில் சிவராம் என்பவருக்கு சொந்தமான தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வியாழக்கிழமை வழக்கம் போல்

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே தீ்ப்பெட்டி தொழிற்சாலையில் மருந்து உராய்வினால் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொழிலாளர்கள் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

விருதுநகர் அருகே பாண்டியன்நகரை அடுத்த முத்தால்நகரில் சிவராம் என்பவருக்கு சொந்தமான தனியார் தீப்பெட்டி தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் வியாழக்கிழமை வழக்கம் போல் பணிகள் தொடங்கி நடைபெற்றது. அதில்,  தீ்க்குச்சிகளில் மருந்து முக்கி எடுத்து காய வைக்கும் பணியில் தொழிலாளர்கள்  ஈடுபட்டிருந்தனர். அப்போது, தீக்குச்சி மருந்துகளுக்கு இடையே ஏற்பட்ட உராய்வினால் தீ விபத்து ஏற்பட்டது. இதில், அந்த அறையி்ல் இருந்த தீக்குச்சிகள் ஆகியவை எரிந்து சேதமடைந்தனர். அதேபோல், பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்கள் பவுன்ராஜ்(65), பேச்சியம்மாள்(35) மற்றும் பாண்டி(45) ஆகியோர் தீ விபத்தில் படுகாயம் அடைந்தனர்.

உடனே தகவலறிந்த பாண்டியன் நகர் போலீஸார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் ஆகியோர் விரைந்து சென்று அடுத்த அறைகளுக்கு பரவாமல் தண்ணீரால் தீயை அணைத்தனர். பின்னர் காயம் அடைந்தவர்களை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அருகில் உள்ள விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். இது தொடர்பாக பாண்டியன் நகர் போலீஸார் தீப்பெட்டி தொழிற்சாலையின் உரிமையாளர் சிவராம் மீது வழக்கு பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT