தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே மலைக்காரியம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா

இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் அதிகாலை முதல் விக்னேஷ்வரபூஜை, தேவதா அனுக்ஞை, புன்னியாகவாஜனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா சூக்த

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே ஆவுடையாபுரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீமலைக்காரி அம்மன் திருக்கோயிலில் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த குடமுழுக்கு விழாவை முன்னிட்டு திருக்கோயில் வளாகத்தில் அதிகாலை முதல் விக்னேஷ்வரபூஜை, தேவதா அனுக்ஞை, புன்னியாகவாஜனம், மகா கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா சூக்த ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதணை உள்ளிட்ட சிறப்பு கால யாக பூஜைகள் நடைபெற்றது.

அதையடுத்து, காலையில் 9 மணிக்கு திருக்கோயிலில் குடமுழுக்கு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து, ஸ்ரீமாலைக்காரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து  பூஜைகள் நடத்தப்பட்ட பின் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர், பிற்பகலில் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வேலூர் தவெக கூட்டத்தில் உயர் நீதிமன்ற விதிமுறைகள் மீறல்! காவல்துறை

தவறாக வழிநடத்தும் ராகுல் மீது வழக்கு: மத்திய அமைச்சர்

சென்னை பயணிகளுக்கு பேரதிர்ச்சி! மேலும் 49 மின்சார ரயில்கள் ரத்து!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

தனியார் ஆம்னி பேருந்து மோதி திமுக பிரமுகர், அவரது தோழியும் பலி

SCROLL FOR NEXT