கடையநல்லூரில் ஜெயலலிதா பேனர் கிழிப்பு: போலீசார் விசாரணை
கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே வைக்கப்பட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேனரை நேற்று மர்ம நபர்கள் கிழித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே வைக்கப்பட்டிருந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பேனரை நேற்று மர்ம நபர்கள் கிழித்தனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் வார்டு பிரதிநிதி முகமது உவைஸ், மற்றும் சவூதி அரேபிய ஜெயலலிதா பேரவை செயலாளர் மைதீன் ஆகியோர் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி கடையநல்லூர் பெரிய பள்ளிவாசல் அருகே ஒரு பேனர் வைத்திருந்தனர். அதை நேற்று மர்ம நபர்கள் சிலர் கிழித்துள்ளனர். இதுகுறித்து முகமது, உவைஸ், மைதீன் ஆகியோர் கொடுத்த புகாரின் அடைப்படியில் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.