ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் ஆட்டோவில் கடத்தல்: மூவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணம் கேட்டு ஒருவரை ஆட்டோவில் கடத்திச் சென்ற மூவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒருவர் ஆட்டோவில் கடத்தல்: மூவர் கைது
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணம் கேட்டு ஒருவரை ஆட்டோவில் கடத்திச் சென்ற மூவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் பணம் கேட்டு ஒருவரை ஆட்டோவில் கடத்திச் சென்ற மூவரை போலீஸார் கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (50). மில் கூலித் தொழிலாளி. இவரது மனைவி பத்மாவதி மீது பலருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் மோசடி செய்ததாக 2014 அக்டோபர் மாதம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு உள்ளது. இந்த வழக்கில் புகார்தாரர் பழனிச்செல்வம் ஆகும்.
இந்நிலையில் செவ்வாய்கிழமை வேலைக்குச் செல்வதற்காக ராமகிருஷ்ணாபுரம் புறவழிச் சந்திப்பில் முத்துக்குமார் நின்று கொண்டிருந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த நால்வர் முத்துக்குமாரை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றி கடத்திச் சென்றுள்ளனர். இவர் கூக்குரலிடவே, அங்கிருந்து சுமை தூக்கும் தொழிலாளிகள் இரு சக்கர வாகனங்களில் ஆட்டோவை துரத்திச் சென்று ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்றம் அருகே மடக்கிப் பிடித்தனர். அப்போது ஆட்டோவில் வந்த ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
ஏனையோரையும் ஆட்டோவையும் பிடித்து சுமை தூக்கும் தொழிலாளிகள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் கொண்டுவந்து ஒப்படைத்தனர். விசாரணையில் ஆட்டோவை விருதுநகரைச் சேர்ந்த செந்தில்குமார் (27) என்பவர் ஓட்டி வந்துள்ளார். மேலும் ஆட்டோவில் வந்து கடத்தலில் ஈடுபட்டவர்கள் விருதுநகரைச் சேர்ந்த முனியாண்டி (38), பாண்டி (29) என்பது தெரிய வந்தது. இவர்கள் மூவரையும் வழக்குப் பதிவு செய்து போலீஸார் கைது செய்து, ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய காரல் மார்க்ஸ் என்பவரைத் தேடி வருகிறார்கள். முத்துக்குமார் கொடுத்துள்ள புகாரில், பழனிச்செல்வத்தின் தூண்டுதலில் பேரில் தன்னை பணம் கேட்டு கடத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.