ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இடைத் தேர்தலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளதாக புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
இன்று காலை வாக்குப்பதிவு துவங்கி, மாலை 5 மணி நிலவரப்படி, 76.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மொத்தம் உள்ள 2,70,000 வாக்காளர்களில் இதுவரை 2,07,821 பேர் வாக்களித்துள்ளனர்.
இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் வாக்களித்துள்ளனர். அதாவது, ஆண்கள் - 1,01,088 பேரும், பெண் வாக்காளர்கள் 1,06,727 பேரும், திருநங்கைகள் - 6 பேரும் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர். 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
ஒரு வாக்குச்சாவடியை தவிர அனைத்து இடங்களிலும் தடையின்றி வாக்குப்பதிவு நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 16ம் தேதி நடக்க உள்ளது.
மேலும் விவரமாக...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.