சிதம்பரத்தில் காவிரி பாதுகாப்பு இயக்கத்தினரின் மறியல் போராட்டம்: 144 பேர் கைது
பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதிமுக, தமாக, தவாக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 144 பேரை
சிதம்பரம் கடலூர் சாலையில் வண்டிகேட் பகுதியில் உள்ள மத்திய தொலைத்தொடர்பு அலுவலகம் (பிஎஸ்என்எல்) அலுவலகம் முன்பு காவிரி
பாதுகாப்பு இயக்கம் சார்பில் மதிமுக, தமாக, தவாக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினர் மறியல் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 144 பேரை போலீஸார் கைது செய்தனர்.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய இடங்களில் நடுவர்மன்ற தீர்ப்பை மதிக்காமல், இரு அணைக்கள் கட்டுகின்ற கர்நாடக அரசை கண்டித்தும், அதனை தட்டிக்கேட்காத மத்தியஅரசை கண்டித்தும், காவிரி டெல்டா மாவட்டங்களிலை பாலைவனமாக்குகின்ற மீத்தேன் எரிவாயு திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மாவட்டத் தலைவர் ஏ.ராதாகிருஷ்ணன், மூப்பனார் பேரவைத் தலைவர் ஆர்.மக்கீன், பேரவை நிறுவனர் எம்.என்.ராதா, நிர்வாகிகள் குமார், வைத்தி, ரஜினிகாந்த், மதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.என்.குணேசேகரன், கே.வி.மோகனசுந்தரம்,
கு.பெருமாள், என்.கண்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன், காங்கிரஸ் கட்சி சார்பில் மாநிலதுணைத் தலைவர் செந்தில்குமார், தவர்த்தாம்பட்டு விஸ்வநாதன், ஜெயச்சந்திரன், கே.வி.இளங்கீரன், ஜி.கே.குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட4 பெண்கள் உள்ளிட்ட 144 பேரை சிதம்பரம் டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு தலைமையிலான போலீஸார் கைது செய்தார். இதனால் அப்பகுதியில் சுமார் 10 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.