முகப்பு
தற்போதைய செய்திகள்

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற தினமும் 2 மணி நேரம் நூலகம் சென்று படிக்க வேண்டும்: இறையன்பு

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற தினமும் 2 மணி நேரமாவது நூலகம் சென்று மாணவர்கள் படிக்க வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வை.இறையன்பு கூறினார்.

தற்போதைய செய்திகள்

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற தினமும் 2 மணி நேரம் நூலகம் சென்று படிக்க வேண்டும்: இறையன்பு

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற தினமும் 2 மணி நேரமாவது நூலகம் சென்று மாணவர்கள் படிக்க வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வை.இறையன்பு கூறினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:46 AM
பகிர்:

ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற தினமும் 2 மணி நேரமாவது நூலகம் சென்று மாணவர்கள் படிக்க வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் வை.இறையன்பு கூறினார்.

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை ஐ.ஏ.எஸ். அகாடமி தொடக்க விழா, டாக்டர் வி.வாசுதேவன் அரங்கில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அகாடமியைத் தொடங்கி வைத்து இறையன்பு பேசுகையில் கூறியதாவது:

மிகவும் பின்தங்கிய பகுதியில் உருவாகியுள்ள இப் பல்கலைக்கழக மாணவர்கள், மத்திய தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் பங்கேற்று, அகில இந்தியப் பணிகளில் பணியாற்ற வேண்டும். நான் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதும் போது எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. ஆனால் இன்று பலர் உள்ளனர். எந்தவொரு செயலிலும் வெற்றி பெற வழிகாட்டுதல் அவசியம். அனைவரது பல்வேறு வாழ்க்கை நிலைப்பாட்டிலும் இது தேவை. இந்திய அரசுப் பணியில் (ஐ.ஏ.எஸ்.) மத்திய, மாநில அரசுகளில் பணிபுரியும் போது மிக மிக ஏழை மக்களுக்கு அரசின் உதவிகளைச் செய்ய முடியும்.

பட்டப்படிப்புகளை படித்தவர்கள் அனைவரும் இத்தேர்வில் பங்கேற்கலாம். 21 வயது ஆகியிருக்க வேண்டும். கலைப் பிரிவு மாணவர்கள் தற்போது இந்திய வனத்துறைப் பணிக்கு (Indian Forest Service) மட்டும் செல்ல முடியாது. பட்டப் படிப்பில் எடுக்கும் மதிப்பெண்கள் இதற்குப் பயன்படாது. மத்திய தேர்வாணையம் நடத்தும் முதல் நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் எடுக்கும் மதிப்பெண்களே உங்கள் தரத்தை நிர்ணயிக்கும். ஒவ்வொரு மதிப்பெண்ணும் மிக முக்கியமானது. ஒரு மதிப்பெண் குறைந்தால் கூட பெரிய பதவிகள் மாறிப்போகும். தொலைதூரக் கல்வியில் பட்டம் பெற்றவர்களும் இத் தேர்வை எழுதலாம்.

வினாக்களுக்கு நீங்கள் எழுதும் பதிலை, அதனை நியாயப்படுத்தும் வகையில் எழுத வேண்டும். மத்திய அரசின் அயல் நாட்டுக் கொள்கை என்ன என்பதை அவ்வப்போது நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.முன்பெல்லாம், பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எழுதும் கடிதங்களைப் படித்து மகிழ்வார்கள். ஆனால் இப்போது மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலம் பேசிக் கொள்கிறார்கள். ஒரு காலத்தில் இந்தியா செல்வம், வானவியல், பொருளாதாரத்தில் முன்னிலை பெற்றது. இன்று பின்தங்கிய நிலை. ஆனால் இன்று உலகளவில் இந்தியா அதிக அளவில் இளைஞர்களைக் கொண்ட நாடாக விளங்குகிறது.

உலகில் வளர்ச்சி பெற்ற நாடாக இந்தியாவை மாற்ற உங்களால் முடியும். உங்கள் ஆற்றலை எல்லாம் குவித்து அறிவை வளர்க்க வேண்டும். இந்த மண்ணுக்கு உங்கள் ஆற்றலை பயன்படுத்த வேண்டும். இந்தியா எழுச்சி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் போதும் அது வலிமையான பாரதமாக மாறும், எழுச்சி மிக்க பாரதமாக மாறும்.நிறையப் பெற்றவர்கள் இல்லாதவர்களுக்கு கொடுங்கள் என்பது நபிகள் கூறியது. அதேபோல் நீங்கள் அதிகம் பெற்றுள்ள கல்விச் செல்வத்தை இந்தியா முழுவதும் வழங்குங்கள். அப்போதுதான் வளர்ச்சியடைய முடியும். உங்கள் அறிவை முழுமையாகப் பயன்படுத்துங்கள். வாழ்க்கை என்ற நோட்டுப் புத்தகத்தின் ஒரு பக்கத்தைக்கூட வீணடிக்க உங்களுக்கு அதிகாரம் இல்லை.

பல்கலைக்கழகம் இப்போது வாழ்க்கைக் கல்வியைத்தான் கற்பிக்கிறது. வாழ்க்கையில் நீங்கள் சந்திக்கும் பிரச்னைகளை நீங்களே எதிர்கொண்டுதான் தீர்க்க முடியும். கல்லூரி வாழ்க்கையில் தான் உங்கள் எதிர்கால வாழ்க்கையை திட்டமிட்டு வடிவமைக்க முடியும். செய்கிற செயலில் ஒரு மகிழ்ச்சி இருக்க வேண்டும். மதிப்பெண்களை மனதில் வைத்து படிக்காமல், மகிழ்ச்சியோடு படியுங்கள். உங்கள் சமயோகித புத்தி திறனையும் சோதிப்பார்கள். அதற்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்கள் பேச்சுத் திறனை, ஆங்கிலப் புலமையை வளர்த்துக் கொள்ளச் செய்யுங்கள். உழைப்பு என்பதை நிறுத்தக் கூடாது. உழைக்கின்ற இடம்தான் சொர்க்கம். செய்கின்ற பணியில் அர்ப்பணிப்பு வேண்டும். இன்றைய இளைஞர்களுக்கு வைராக்கியம் வேண்டும். தீய பழக்க வழக்கங்கள் வரக்கூடாது. நமக்கு எத்தனை நெருக்கடி வந்தாலும் அதனையும் மீறி நாம் ஜெயிக்க வேண்டும்.

இந்தியா எவரெஸ்டி சிகரம் மீது நின்று கலங்கரை விளக்கமாக உலகில் திகழ உங்கள் பணி, கல்வியறிவு, கட்டுப்பாடு, கடுமையான உழைப்பு ஆகியவற்றை இளைஞர்களிடமிருந்து நாடு எதிர்பார்க்கிறது என்றார் இறையன்பு.

விழாவிற்கு துணை வேந்தர் ச.சரவணசங்கர் தலைமை தாங்கினார். பதிவாளர் டாக்டர் வெ.வாசுதேவன் வரவேற்றார். பேராசிரியை எஸ்.யுவனராணி நன்றி கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →