முகப்பு
தற்போதைய செய்திகள்

விராலிமலையில் போலி தங்கம் விற்பனை செய்த அக்கா, தம்பி கைது

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் போலி தங்கத்தை விற்பனை செய்த  அக்கா, தம்பி இருவரை விராலிமலை போலிஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:47 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் போலி தங்கத்தை விற்பனை செய்த  அக்கா, தம்பி இருவரை விராலிமலை போலிஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்

விராலிமலை பெரியார் நகரைச் சேர்ந்தவர் மருதை மகன் சக்திவேல், இவரிடம் பிப், 22 ம் தேதி ஆந்திரா மாநிலம், குண்டுர் மாவட்டம் சத்திரம்பள்ளியைச் சேர்ந்த, சுப்பாராவ் மகன் ராஜீ(25) இவரது அக்கா திருத்தம்மா(35) ஆகிய இருவரும், தங்கள் வீட்டில் குழி தோண்டும் போது தங்கபுதையல் கிடைத்ததாகவும், அதை குறைந்த விலைக்கு உங்களுக்கு தருகிறோம் என்று ஆசை வார்த்தை கூறி, ரூ 5000 ம் பெற்றுக்கொண்டு போலி தங்ககட்டியை அவரிடம் கொடுத்து விட்டு மாயமாகி விட்டனர்,

பின்னர் சக்திவேல் அதை சோதனை செய்து பார்த்ததில் அது தங்கம் அல்ல போலி என்று தெரியவந்தது, பின்னர் இதுதுறித்து சக்திவேல் விராலிமலை போலிஸில் புகார் கொடுத்ததை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் தலைமையில் போலிஸார் ஞாயிற்றுக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர், அப்போது கோரிமேடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக சுற்றித்திரிந்த இரண்டு பேரை பிடித்து விசாரித்ததில், சக்திவேலிடம் போலி தங்கத்தை ஏமாற்றி விற்றது

அவர்கள் தான் என தெரியவந்தது, உடனடியாக அவர்களை கைது செய்த போலிஸார், அவர்களிடம் இருந்து இரண்டு சக்கரவாகனம், போலி தங்ககட்டிகள், தங்கம் வெட்டி எடுக்க பயன்படுத்தப்பட்ட தங்கவேலை தொடர்பான தளவாட சாமான்கள் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.