முகப்பு
தற்போதைய செய்திகள்

நெல்லையில் ஆட்டோ ஓட்டுநர் கொலை: பேருந்து மீது கல்வீசி தாக்குதல்

நெல்லை தச்சநல்லூரில் பேருந்து மீது கல் வீசி தாக்குதல் நடத்தியதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகின்றது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:48 AM
பகிர்:

திருநெல்வேலியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரது ஆதரவாளர்கள் திருநெல்வேலி-மதுரை சாலையில் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆவேசமடைந்த சிலர், அந்த வழியா வந்த லாரி, 3 பேருந்துகளின் கண்ணாடிகளின் மீது கல் வீசி தாக்கினர்.

திருநெல்வேலியை அடுத்த தச்சநல்லூர் வெக்காளியம்மன் கோயில் தெருவைச்
சேர்ந்தவர் பொன்னையா (24). ஆட்டோ ஓட்டுநரான இவர், செவ்வாய்க்கிழமை காலை
பள்ளி மாணவர்களை அழைத்துக் கொண்டு வண்ணார்பேட்டையில் உள்ள பள்ளியில்
இறக்கிவிட்டு மீண்டும் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது,  வடக்கு
புறவழிச் சாலையில் அவரை வழிமறித்த மர்மநபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட
ஆயதங்களால் வெட்டிவிட்டு தப்பியோடியது. இதில், சம்பவ இடத்திலேயே பொன்னையா உயிரிழந்தார். இந்த சம்பவத்தைக் கண்டித்து மறியல், கல்வீச்சு நடந்ததால்
நெல்லையில் பதற்றம் நிலவுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.