முகப்பு
தற்போதைய செய்திகள்

அன்னவாசல் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி தனியார் கல்லூரி நிர்வாக அலுவலர் சாவு

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள சத்தியமங்கலம் அருகே, பிப்,24 ம் தேதி, இருகச்சர வாகனத்தில் சென்ற தனியார் கல்லூரி நிர்வாக அலுவலர்(ஏஒ) மீது அடையாளம் தெரியாத வாகனம்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:49 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அடுத்துள்ள சத்தியமங்கலம் அருகே, பிப்,24 ம் தேதி, இருகச்சர வாகனத்தில் சென்ற தனியார் கல்லூரி நிர்வாக அலுவலர்(ஏஒ) மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயங்களுடன் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனின்றி வியழக்கிழமை உயிரிழந்தார்.

புதுக்கோட்டை திருக்கோகர்ணத்தை சேர்ந்தவர் சி. நாகராஜ்(77) இவர் அன்னவாசல் அருகேயுள்ள சத்தியமங்கலம் தனியார் பொன்மாரி கல்வியல் கல்லூரியில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார், இவர் பிப், 24 ம் கல்லூரி செல்வதற்கு தனது இருசக்கர வாகனத்தில் சத்தியமங்கலம் அருகே சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நாகராஜ் மீது மோதியுள்ளது, இதில் பலத்த காயமடைந்து திருச்சி தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நாகராஜ் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

இதுகுறித்து அன்னவாசல் போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.