முகப்பு
தற்போதைய செய்திகள்

இலுப்பூரில் இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி சாவு

மேலபட்டியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(50) இவர் அன்னவாசல் ஒன்றியம் எண்ணெய் ஊராட்சியில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்கும்(ஒஎச்டி, ஆபரேட்டர்) பணியில் உள்ளார், இவர் சொந்த வேலை

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:49 AM
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் தொழிலாளி உயிரிழந்தார்

மேலபட்டியைச் சேர்ந்தவர் தியாகராஜன்(50) இவர் அன்னவாசல் ஒன்றியம் எண்ணெய் ஊராட்சியில், மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்கும்(ஒஎச்டி, ஆபரேட்டர்) பணியில் உள்ளார், இவர் சொந்த வேலை காரணமாக வியாழக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் இலுப்பூர் வந்து விட்டு பின்னர் வீட்டுக்கு செல்லும் வழியில், கோட்டை தெரு அருகே வந்த போது, அவ்வழியே வந்த நான்கு சக்கர வாகனம் தனது கட்டுப்பாட்டு இழந்து  தியாகராஜன் வாகனம் மீது மோதியுள்ளது, இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து இலுப்பூர் போலிஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.