தற்போதைய செய்திகள்

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு ஜன.10ம் தேதி நடைபெறுகிறது

இத்தேர்வுக்கு விருதுநகர் மாவட்டத்திலிருந்து 5346 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு காலையில் 10 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 1 மணி வரையில் நடைபெற இருக்கிறது. இதற்காக இம்மாவட்டத்தில்

எஸ். பாண்டியன்

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் நடத்தும்  முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வு வருகிற 10ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கிறது.

இத்தேர்வுக்கு விருதுநகர் மாவட்டத்திலிருந்து 5346 பேர் விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வு காலையில் 10 மணிக்கு தொடங்கி, தொடர்ந்து 1 மணி வரையில் நடைபெற இருக்கிறது. இதற்காக இம்மாவட்டத்தில் 11 பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதில், விருதுநகர் கேவிஎஸ் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஷத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளி, சாத்தூரில் எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, எத்தலால் ஹார்வி மேல்நிலைப்பள்ளி, சிவகாசியில் எஸ்.எச்.என்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஹெச் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அருப்புக்கோட்டையில் தேவாங்கர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், எஸ்பிகே ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் என தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெத் மூனி அதிரடி: இந்தியாவை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி!

எம். ஆர். ராதா மகள் என்பதை நிரூபித்திருக்கிறேன்: ராதிகா சரத்குமார்

புதிய தொடரில் மீண்டும் ஜோடி சேரும் பாக்கியா - கோபி ஜோடி!

ஒருநாள், டெஸ்ட் தொடர்களுக்காக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸி.!

ஏழரைச் சனியில் சனி கிரகத்துடன் ஏற்படும் பயண அனுபவம்!

SCROLL FOR NEXT