முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் விரலைக் கடித்து காயப்படுத்தியவர் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் விரலைக் கடித்து காயப்படுத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவல் சார்பு ஆய்வாளர் விரலைக் கடித்து காயப்படுத்திய நபரை போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில், சார்பு ஆய்வாளராக வேலை செய்து வருபவர் சந்திரன் (36). இவர் வியாழக்கிழமை இரவு தலைமைக் காவலர் கனகராஜூடன் மதுரை சாலையில் ரோந்துப் பணியில் இருந்தார். அப்போது அந்த இடத்தில் வல்கனைசிங் கடை வைத்திருக்கும் செல்வக்குமார் (45) என்பவர் திறந்த வெளியில் மலம் கழித்துக் கொண்டிருந்துள்ளார். இதனை சார்பு ஆய்வாளர் சந்திரன் கண்டித்துள்ளார்.

இதில் ஆத்திரமுற்ற செல்வக்குமார், சார்பு ஆய்வாளரை ஆபாசமாகப் பேசி பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். காவல் நிலையத்திற்கு அழைத்து வரும்போது, சார்பு ஆய்வாளரின் வலது கையின் நடுவிரலை செல்வக்குமார் பலமாகக் கடித்துள்ளார். இதில் சார்பு ஆய்வாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து சார்பு ஆய்வாளர் சந்திரன், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வக்குமாரைக் கைது செய்தனர். சார்பு ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

முழு கட்டுரையைப் படிக்க →