முகப்பு
தற்போதைய செய்திகள்

பண்ருட்டியில் அதிமுக கவுன்சிலர் தீ குளிக்க முயற்சி

பண்ருட்டி நகராட்சியில் 33வது வார்டு கவுன்சிலராக இருக்கும் கோவிந்தன் என்பவர் நகர அம்மா பேரவை துணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:19 AM
பகிர்:

பண்ருட்டி நகராட்சியில் 33வது வார்டு கவுன்சிலராக இருக்கும் கோவிந்தன் என்பவர் நகர அம்மா பேரவை துணை செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் கிளைக் கழகத் தேர்தல் நடந்தது. இதில் இரு தரப்பினருக்கு இடையே போட்டி நிலவியது. கிளைக்கழக தேர்தலில் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் பெயர் நிர்வாக பட்டியலைல் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கோவிந்தன் இன்று காலை பண்ருட்டி 4 முனை சந்திப்பில் நின்று தன் உடலில் மண்ணெணைய் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அப்போது அங்கு நின்றிருந்த போக்குவரத்து போலீஸார் அவரை காப்பாற்றி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவத்தை அடுத்து அதிமுக நிர்வாகிகள் காவல் நிலையத்தில் கூடியுள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →