ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்குவிற்கு குழந்தை சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்குவிற்கு குழந்தை சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர், கூனங்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சுந்தர் (28). இவரது மனைவி மாரிச்செல்வி. இவர்களுக்கு லாவண்யா (5) மற்றும் வர்ஷினிஸ்ரீ (2) ஆகிய குழந்தைகள் உண்டு.
கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வர்ஷினிஸ்ரீக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. சிவகாசியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்து சிகிச்சை அளித்து வந்துள்ளனர். வர்ஷினிஸ்ரீயின் உடல் நிலை மோசம் அடைந்ததையடுத்து, தனியார் மருத்துவமனையின் மருத்துவர் வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளார்.
இதனையடுத்து ஞாயிற்றுக்கிழமை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்ஷினிஸ்ரீ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன் தொடர்ச்சியாக இந்தத் தெருவில் திங்கள்கிழமை நகராட்சி ஆணையாளர் பழனிவேல், சுகாதார ஆய்வார்கள் தவிட்டுராஜா, கண்ணன் ஆகியோர் தலைமையில் கொசு மருந்து அடித்தல், கழிவுநீர் பாதையை சுத்தம் செய்தல், குடிநீர் தொட்டிகளில் அபேட் மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது.
இது குறித்து அப் பகுதி பொதுமக்கள் கூறுகையில்: ஏதாவது குழந்தைகள் இறந்தால் அந்தப் பகுதியில் நகராட்சி நிர்வாகம் ஒருநாளைக்கு சுகாதாரப் பணியை மேற்கொள்கிறது. கழிவு நீர் பாதைகள் பல மாதங்களாக அப்புறப்படுத்தப்படாமல், குப்பைகள் தேங்கிப்போய் கிடக்கிறது. கொசு மருந்து தெளிப்பதே கிடையாது என்றனர். மாவட்ட நிர்வாகம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி பகுதியில் முறையான சுகாதரப் பணிகளை முடுக்கிவிட்டு நகராட்சியின் 33 வார்டு பொதுமக்களின் நலனில் அக்கறைகாட்ட வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.