முகப்பு
தற்போதைய செய்திகள்

 இளம்பெண்ணை மானபங்க முயற்சி: 3 பேர் மீது வழக்கு

இளம்பெண்ணை மானபங்கம்படுத்த முயன்ற 3 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

Updated On : 9 ஜனவரி, 2015 at 5:19 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 9:53 AM

இளம்பெண்ணை மானபங்கம்படுத்த முயன்ற 3 பேர் மீது போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனர்.

கடலூர் குண்டுஉப்பலவாடி காலனியைச் சேர்ந்த சக்திவேல் மகன் சதீஷ்(18), அதேப்பகுதியைச் சேர்ந்த தர்மா, குள்ளகுமார் மற்றும் சிலர் வியாழக்கிழமை இரவில் அப்பகுதியின் முக்கிய வீதியில் நின்றுக்கொண்டு அவ்வழியாகச் செல்லும் இளம்பெண்களை கேலி கிண்டல் செய்து வந்ததாக தெரிகிறது.

அப்போது, அவ்வழியாகச் சென்ற அதேப்பகுதியைச் சேர்ந்த 18வயது இளம்பெண்ணை கேலி கிண்டல் செய்ததோடு, அவரது ஆடையை இழுத்து மானபங்கம் படுத்த முயற்சித்ததாக தெரிகிறது. அதிலிருந்து தப்பிய அப்பெண் வீட்டில் உள்ளோர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இத்தகவல் தெரிந்த பெண்ணின் உறவினர் ராஜேஸ் என்பவர் அக்கும்பலை தட்டிக்கேட்ட போது அவர்கள் ராஜேûஸ தாக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், இதுகுறித்து அப்பெண் கடலூர் புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸôர் சதீஷை கைது செய்தனர். மேலும், சிலரை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் மேலும், மோதல் ஏற்படாமலிருக்க போலீஸார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.