முகப்பு
தற்போதைய செய்திகள்

காய்ச்சல் உயிரிழப்பு: எம்.எல்.ஏ. நிதியில் வீட்டிற்கு ஒரு கொசு வலை வழங்க கோரிக்கை

விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வீட்டிற்கு ஒரு கொசு வலை சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைத் தடுக்க அரசு போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வீட்டிற்கு ஒரு கொசு வலை சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து சங்கத்தின் விருதுநகர் மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ், வெள்ளிக்கிழமை தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விவரம்:

விருதுநகர் மாவட்டத்தில் குறிப்பாக ராஜபாளையம் மற்றும் ஸ்ரீவி்லலிபுத்தூர் பகுதியில் ஏற்பட்டுள்ள மர்மகாய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகைகளை மேற்கொண்டு சிறப்பாக நோய் தடுப்பு நடவடிக்கைகளைச் செயல்படுத்தி வருவதற்கு சங்கம் பாராட்டுக்களை தெரிவிக்கிறது. மூன்று அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திலேயே முகாமிட்டு நோய் தடுப்புப் பணிகளை தீவிரமாக நிறைவேற்றி வருவதற்கு பாராட்டு தெரிவிக்கிறது.

இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்டதற்கு முக்கிய காரணம் கடந்த 3 ஆண்டுகளாகவே ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் கழிவு நீர் பாதைகள் மற்றும் அவை சென்றடையும் ஓடைகளை தூர்வாரப்படாததே காரணம். நகராட்சிகள் சாலைகளில் பேவர் பிளாக் கற்கள் பதிப்பதில்தான் கவனம் செலுத்தி பல கோடியை அதில் முடக்கி, மக்களின் சுகாதாரப் பணிகளை கவனிக்காமல் விட்டதே நோய் தொற்றுக்கு முக்கிய காரணமாகும்.

சட்டப் பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து இரு தொகுதிகளிலும்
உடனடியாக வீட்டிற்கு ஒரு கொசு வலை அரசு வழங்கி, இது குறித்த ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் சுற்றுப்புறத் தூய்மை குறித்த விழிப்புணர்வை கிராமப்புறங்களில் 1-ம் வகுப்பு முதலே பள்ளிகளில் ஆசிரியர்கள் கற்றுத் தர அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி்க்கை மனுவில் காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →