தற்போதைய செய்திகள்

மயிலாடுதுறை அருகே ரயிலில் அடிப்பட்டு இறந்து கிடந்த இளம்பெண்ணின் சடலம் மீட்பு

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ரயிலில் அடிபட்டு, இறந்து கிடந்த இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

அ. அன்புமணி

நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ரயிலில் அடிபட்டு, இறந்து கிடந்த இளம் பெண்ணின் சடலத்தை மீட்டு ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை-விழுப்புரம் அகல ரயில்பாதை,மயிலாடுதுறை அடுத்த நீடூர் ரயில்வே கேட் அருகே இளம்பெண் ஒருவர் ரயிலில் அடிபட்டுக் கிடப்பதாக மயிலாடுதுறை ரயில்வே போலீஸாருக்கு வெள்ளிக்கிழமை காலை தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து அங்கு சென்ற போலீஸார் இறந்து கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகாமையில் உள்ள அரண்குடி எனும் கிராமத்தைச் சேர்ந்த  வைகுண்டம் என்பவரது மகள் இந்துமதி(24) என்பதும்,பி.காம் பட்டதாரியான இவர் சென்னை தாம்பரத்தில் உள்ள பிஸாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பு  நிறுவனத்தில்  வேலைப் பார்த்து வந்ததும் தெரியவந்துள்ளது.

இந்துமதி இறந்து கிடந்தது தகவல் பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சம்பவம் குறித்து யில்வே போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT