முகப்பு
தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு போலி டாக்டர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் செய்து வந்த இருவரை போலீஸார்

தற்போதைய செய்திகள்

ஸ்ரீவில்லிபுத்தூரில் இரு போலி டாக்டர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் செய்து வந்த இருவரை போலீஸார்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 9-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு படித்துவிட்டு, ஆங்கில மருத்துவம் செய்து வந்த இருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர், அரசு மருத்துவமனையின் முதுநிலை குடிமை மருத்துவர் கே.செல்வ பாஸ்கர் (53) என்பவருக்கு தொலைபேசியில் குறிப்பிட்ட இடங்களில் போலி டாக்டர்கள் இருந்து ஆங்கில மருத்துவம் செய்துவருவதாக சனிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதன் பேரில் இவர் மற்றும் அதிவிரைவுப் படை போலீஸார் வன்னியம்பட்டி, கிழக்குத் தெருவில் உள்ள ஒரு மருத்துவமனையை சோதனை செய்தனர். அங்கு கோவிந்தன் மகன் சிங்கராஜ் (45) என்பவர் மருத்துவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் மருத்துவம் செய்வதற்கு படித்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. விசாரணையில் பிளஸ் 2 படித்துள்ளதாகக் கூறினார்.

இது குறித்து டாக்டர் செல்வ பாஸ்கர் வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் சிங்கராஜ் மீது, எந்தவித அரசு அனுமதியும் பெறாமல் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று தெரிந்திருந்தும் அசட்டு துணிச்சலுடன் ஆங்கில மருத்துவம் செய்ததாக புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சிங்கராஜைக் கைது செய்து, அவரது இடத்திலிருந்து மருந்து, மாத்திரைகள், ஊசி  மருந்துகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்திராநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர், இந்திராநகரில் குறிப்பிட்ட இடத்தில் இக் குழுவினர் சோதனை நடத்தினர். அங்கு செபஸ்தியான் மகன் சந்தியாகு (50) என்பவர் ஆங்கில வைத்தியம் செய்து கொண்டிருந்தார். விசாரணையில் இவர் 9-ம் வகுப்பு வரை படித்துவிட்டு, ராஜபாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கம்பவுன்டராக வேலை செய்து வருவதாகக் கூறினார். இது டாக்டர் செல்வ பாஸ்கர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தியாகுவை கைது செய்தனர். மேலும் அவரது இடத்திலிருந்து ஏராளமான மருந்துகள், மாத்திரைகள் மற்றும் ஊசி மருந்துகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இரு போலி டாக்டர்களும் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 2-ல் ஆஜர் செய்யப்பட்டனர். நீதிபதி கவிதா இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இது குறித்து இந்திய மருத்துவக் கழகத்தின் விருதுநகர் மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.செல்வராஜன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஸ்ரீவில்லிபுத்தூர், மம்சாபுரம், வத்திராயிருப்பு, கூமாப்பட்டி, வன்னியம்பட்டி, அழகாபுரி, ராஜபாளையம் பகுதியில் ஏராளமான போலி மருத்துவர்கள் நீண்ட காலமாக ஏழை கிராம மக்களுக்கு தொடர்ந்து முறையற்ற சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்று பிரச்னை ஏற்பட்டபோது, போலி டாக்டர்களைப் பிடித்து கைது செய்தனர். இவர்களுக்கு நீதிமன்றம் மிகக் குறைந்த தொகை அபராதமாக விதித்த்து. இத்தொகையை கட்டிவிட்டு, மீண்டும் தொடர்ந்து வந்து இந்த மருத்துவத்தை அவர்கள் செய்து வருகிறார்கள். இவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து, போலி டாக்டர்களை முற்றிலும் ஒழித்து, பொதுமக்கள் உயிரைக் காக்க நடவடிக்கை நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →