ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை ஒட்டி திறந்தவெளியில் செல்லும் நகராட்சி பொதுக்கழிப்பறை கழிவுகள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவை ஒட்டி, பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சியின் பொதுக்கழிப்பறையின் கழிவுகள் திறந்த வெளியில் செல்வதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை ஒட்டிய தெருவில் உள்ள குழந்தை கடந்த வாரம் டெங்கு பாதிப்பினால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையை ஒட்டி திறந்தவெளியில் செல்லும் நகராட்சி பொதுக்கழிப்பறை கழிவுகள்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவை ஒட்டி, பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சியின் பொதுக்கழிப்பறையின் கழிவுகள் திறந்த வெளியில் செல்வதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை ஒட்டிய தெருவில் உள்ள குழந்தை கடந்த வாரம் டெங்கு பாதிப்பினால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் பிரிவை ஒட்டி, பேருந்து நிலையத்தில் உள்ள நகராட்சியின் பொதுக்கழிப்பறையின் கழிவுகள் திறந்த வெளியில் செல்வதால் பல்வேறு தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை ஒட்டிய தெருவில் உள்ள குழந்தை கடந்த வாரம் டெங்கு பாதிப்பினால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் பேருந்து நிலையத்தில் இலவச மற்றும் கட்டணக் கழிப்பறைகள் உண்டு. இந்தக் கழிப்பறைகளில் செப்டிக் டேங்க் கிடையாது. இதனை தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வரும் நிலையில், இதன் கழிவுகள் அனைத்தும் திறந்த வெளியி்ல் செல்கிறது.
இந்த கழிவுகள் செல்லும் பாதையை ஒட்டி சுமார் 3 ஆயிரம் பெண்கள் படிக்கும் மேல்நிலைப் பள்ளி உண்டு. இந்தப் பாதையை தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகளும், வேலைக்குச் செல்வோரும் துர்நாற்றத்தின் வழியே பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த திறந்த வெளியில் செல்லும் கழிவு நீர் பாதையின் சுமார் 10 மீட்டர் தூரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையின் குழந்தைகள் சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு சுமார் 30 குழந்தைகள் வரை பல்வேறு நோய்களுக்கு அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். இங்கிருந்து வரும் துர்நாற்றம் அனைவரையும் முகம் சுழிக்க வைக்கிறது. இதன் அருகே நகராட்சி இரு சக்கர வாகனம் நிறுத்தும் இடம் உள்ளது. இதனை தினமும் ஆயிரக்கணக்கான் பெண்களும் ஆண்களும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்த திறந்த வெளி கழிவு நீர் பாதையிலிருந்து உற்பத்தியாகி வரும் கொசுக்களால் இப் பகுதியில் குடியிருப்போர் பெரும் அவதிக்குள்ளாகி பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த கழிவு நீர் பாதையை ஒட்டிய கூனங்குளம் தெற்குத் தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சுந்தர்-மாரிச்செல்வி தம்பதியினரின் மகள் வர்ஷினிஸ்ரீ (2) கடந்த 5-ம் தேதி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இவ்வளவு ஒரு மோசமான ஒரு திறந்த வெளி கழிவு நீர் பாதையை மூட நகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது குறித்து இப் பகுதி மக்கள் கூறுகையில், நகராட்சியில் இது குறித்து கூறினால், அவர்கள் நகராட்சி பொதுக் கழிப்பறையின் கழிவுகள் இதன் வழியே செல்வதால், இதனை மூடினால் சுத்தம் செய்தவுது கடினம் என்கிறார்கள்.
நகராட்சி நிர்வாகம் பொதுக் கழிப்பறைகளுக்கு செப்டிக் டேங்க் அமைத்துவிட்டு, இந்த கழிவு நீர் பாதையை போர்க்கால அடிப்படையில் மூடி, இப் பகுதி மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரி்க்கை விடுத்துள்ளார்கள்.