திருச்சியில் போலி டிக்கட் மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்ற 2 பேர் கைது
திருச்சியில் இருந்து ஏர்ஏசியா விமானத்தில் போலி டிக்கட் மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்ற குஜராத் மாநிலம் ஓரா மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில் இருந்து ஏர்ஏசியா விமானத்தில் போலி டிக்கட் மூலம் மலேசியாவுக்கு செல்ல முயன்ற குஜராத் மாநிலம் ஓரா மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் மலேசியா செல்ல இருந்த முகமதுசையது (24) முகமது இக்பால் (34) ஆகிய இருவர் இன்று காலை திருச்சி விமான நிலையத்தில் வந்தனர். அவர்களது டிக்கெட்டை பரிசோதனை செய்ததில் அவர்கள் திரும்பி வருவதற்கான விவரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் திருச்சியில் இருந்து புறப்படுவதற்கான விவரங்கள் இல்லை இதனால் அவர் டிக்கெட் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது . இதையடுத்து அந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.