ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு பேரணியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜாகுணசீலன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர்
தற்போதைய செய்திகள்ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு பேரணியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜாகுணசீலன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர்
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 4 ஆயிரம் மாணவ மாணவியர் பங்கேற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி நிர்வாகம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மற்றும் மாவட்ட கல்வித் துறை இணைந்து இந்த பேரணியை நடத்தின.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் முன்பு பேரணியை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜாகுணசீலன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில், நகர்மன்ற தலைவி வி.செந்தில்குமாரி மற்றும் வெ.பொன்னுப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
பேரணியில் நகரில் உள்ள பள்ளிகள் மற்றும் செவிலியர் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 4 ஆயிரம் மாணவ மாணவியர், நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியே வந்து மீண்டும் ஆண்டாள் சன்னதியை அடைந்தது. பேரணியில் பங்கேற்ற மாணவ மாணவியர் டெங்கு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக் கொண்டும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியும் சென்றனர். மேலும் நகர் முழுவதும் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.