முகப்பு
தற்போதைய செய்திகள்

மது குடிக்க பணம் தராதவருக்கு அரிவாள் வெட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, யாதவர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் மகன் அருண் (27). இவர் சொந்தமாக வேன் வைத்து தீப்பெட்டி ஆலைக்கு ஆட்களை அழைத்துச் செல்லும்

தற்போதைய செய்திகள்

மது குடிக்க பணம் தராதவருக்கு அரிவாள் வெட்டு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, யாதவர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் மகன் அருண் (27). இவர் சொந்தமாக வேன் வைத்து தீப்பெட்டி ஆலைக்கு ஆட்களை அழைத்துச் செல்லும்

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:25 AM
பகிர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மது குடிக்க பணம் கொடுக்காதவரை அரிவாளால் வெட்டிய நபரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டி, யாதவர் கீழத் தெருவைச் சேர்ந்தவர் மோகன்தாஸ் மகன் அருண் (27). இவர் சொந்தமாக வேன் வைத்து தீப்பெட்டி ஆலைக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் தொழில் செய்து வருகிறார்.

இங்குள்ள பெரியகுளம் கண்மாய்க்குச் சென்றுள்ளார். அங்கு வந்த கூமாப்பட்டி, இமானுவேல் தெருவைச் சேர்ந்த போஸ் மகன் ரமணி என்பவர், அருணிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். அருண் தன்னிடம் ரூ.50 மட்டுமே உள்ளது என்று கூறிவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்துள்ளார். ராமசாமியாபுரம் டி.இ.எல்.சி. பள்ளி தெரு அருகே வந்து கொண்டிருந்தபோது, அருணை ரமணி வழிமறித்துள்ளார். என்னைப் பார்த்து பயம் விட்டுப் போய்விட்டதா? குடிக்க பணம் கேட்டால் தரமாட்டியா? என்று கூறி, அரிவாளால் அருணை வெட்டியுள்ளார். இதில் காயமுற்ற அருண் வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கூமாப்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரமணியைத் தேடி வருகிறார்கள்.

முழு கட்டுரையைப் படிக்க →