பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 5 பேர் பலி
திருமங்கலத்தில் இருந்து காஞ்சிப்புரம் நோக்கி சென்ற கார் சிறுவாச்சூர் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதி சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.
பெரம்பலூர், திருமங்கலத்தில் இருந்து காஞ்சிப்புரம் நோக்கி சென்ற கார் சிறுவாச்சூர் அருகே வந்த போது பின்னால் வந்த லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர்.
பொங்கலுக்காக திருமங்கலம் சென்று விட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக பின்னால் வந்த லாரி கார் மீது மோதியதில், காரில் பயணம் செய்த நாராயணசாமி (65), மனைவி (60), சித்ரா (25), 1 வயது குழந்தை மற்றும் கார் ஓட்டுனர் மணிகன்டன் உள்பட 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழனந்தனர்.
பிரேதங்களை கைபற்றி பெரம்பலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.