தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே இளைஞர் தூக்கிட்டு சாவு

விருதுநகர் அருகே ஆமத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ரெங்கையா என்பவரின் மகன் பால்பாண்டி(27). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த பாத்திமாபானு என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே மனைவி வேறு ஒருவருடன் சென்றதால் மனம் உடைந்த இளைஞர் தனக்கு தானே தூக்கிட்டு திங்கள்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர் அருகே ஆமத்தூர் மேட்டுத் தெருவைச் சேர்ந்த ரெங்கையா என்பவரின் மகன் பால்பாண்டி(27). இவருக்கும், இதே பகுதியைச் சேர்ந்த பாத்திமாபானு என்பவருக்கும் கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றதாம்.  இந்நிலையில், வேறு ஒரு நபருடன் தொடர்பு இருந்ததால் பாத்திமாபானு அவருடன் சேர்ந்து ஓடி விட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்த பால்பாண்டி அருகில் இருந்த மரத்தில் தனக்கு தானே தூக்கிட்டுக் கொண்டு உயிரிழந்தாரம். இது தொடர்பாக அவரது உறவினர் நரசிம்மன் ஆமத்தூர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!

எனக்கு தடையாக இருக்கும் அந்த சிலர்... சிவகார்த்திகேயன் பேச்சு!

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!

பிளடி ரோமியா! சமையல்காரர் டூ கேங்ஸ்டர் நானி!

திமுகவிடம் 41 தொகுதிகள் கோரும் காங்கிரஸ்!

SCROLL FOR NEXT