தற்போதைய செய்திகள்

எம்எல்ஏ-வின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மயிலாடுதுறையில்  கடைகள் அடைப்பு

நாகை மாவட்டம்,மயிலாடுதுறையில் வணிகர்கள் புதன்கிழமை கடையடைப்பு செய்து எம்எல்ஏ-வின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு  ஆதரவளித்துள்ளனர்.

அ. அன்புமணி

நாகை மாவட்டம்,மயிலாடுதுறையில் வணிகர்கள் புதன்கிழமை கடையடைப்பு செய்து எம்எல்ஏ-வின் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு  ஆதரவளித்துள்ளனர்.

மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம் உருவாக்கவேண்டும், புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும்,பெரியார் அரசு மருத்துவமனையை நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தவேண்டும்,புறவழிச்சாலை    அமைக்கும் பணிகளை துரிதப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் தேமுதிக எம்எல்ஏ ஆர்.அருள்செல்வன் ஜன 20-ந் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றார்.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மயிலாடுதுறை  வணிகர்கள் கடையடைப்பு செய்துள்ளனர்.

காந்திஜி சாலை,பட்டமங்கலத் தெரு,பெரியக்கடைத் தெரு,மகாதானத்தெரு,கூறைநாடு, ரயிலடி,பேருந்து நிலையம் மற்றும் பிறப்பகுதிகளில் உள்ள 1000-க்கு மேற்பட்ட  கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆரோவில் சா்வதேச நகரில் இரண்டாவது உலக ஆன்மிக மகோத்ஸவம்: பிரதமா் நரேந்திர மோடி தொடங்கிவைக்கிறாா்

சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி விதிப்பா?

தொழில் வரி செலுத்தியதாக போலி ரசீது கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: இளைஞரிடம் போலீஸாா் விசாரணை

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

SCROLL FOR NEXT