விருது நகர் மாவட்டத்தில் தேசிய வருவாய் வழி தேர்வு வரும் 24-ம் தேதி நடைபெற இருக்கிறது
தேசிய வருவாய் வழி திறனாய்வு மற்றும் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு வருகிற 24-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி
தேசிய வருவாய் வழி திறனாய்வு மற்றும் படிப்பு உதவித் தொகைக்கான தேர்வு வருகிற 24-ம் தேதி நடைபெற இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தெரிவித்தார்.
மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் பல்வேறு வகையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதேபோல், ஏழை எளிய மாணவ, மாணவிகள் மாதந்தோறும் உதவித் தொகை ரூ.500 பெறும் வகையில் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவி திட்டத்தின் அடிப்படையில் தேர்வு நடத்தப்படுகிறது.
இத்தேர்வில் பங்கேற்பதற்கு 7-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று, நிகழாண்டில் 8-ம் வகுப்பு படித்து வருகிறவராக இருக்க வேண்டும். அதில் இம்மாவட்டத்தைச் சேர்ந்த 267 பள்ளிகளில் இருந்து 4809 மாணவ, மாணவிகள் தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர். இத்தேர்வுக்காக விருதுநகர், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வத்திராயிருப்பு, அருப்புக்கோட்டை, நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி ஆகிய பகுதிகளில் 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
ஏற்கனவே இத்தேர்வு கடந்த டிச.27-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அப்போது, அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வுக்கான விடுமுறை அளிக்கப்பட்டிருந்த காரணத்தால் ஜன.3ம் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதையடுத்து அன்றைய நாளில் அரையாண்டு தேர்விற்கான விடைத்தாள் திருத்தப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு வழங்கும் பணியை ஆசிரியர்கள் மேற்கொண்டதால் தள்ளிப்போடப்பட்டு, தற்போது வருகிற 24-ம் தேதி தேசிய வருவாய் வழி திறன் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வில் பெயர் பட்டியலில் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட இருப்பதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தெரிவித்தார்.