தற்போதைய செய்திகள்

3-வது நாளாக தொடர் உண்ணாவிரதம்: மயிலாடுதுறை தேமுதிக எம்ஏல்ஏ கைது

இந்நிலையில் 3-வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த எம்எல்ஏ-வை போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

அ. அன்புமணி

நாகை மாவட்டம்,மயிலாடுதுறையில் 3-வது நாளில் உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த தேமுதிக எம்எல்ஏ ஆர்.அருள்செல்வனை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர்.

மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்ட தனி மாவட்டம் உருவாக்கவேண்டும்,  புதிய பேருந்து நிலையம் அமைக்கவேண்டும்,புறவழிச்சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்,பெரியார் அரசு மருத்துவமனையை நவீன் வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக மாற்றவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன-20 முதல் மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.அருள்செல்வன் தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தார். 

இந்நிலையில் 3-வது நாளாக உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த எம்எல்ஏ-வை போலீஸார் வியாழக்கிழமை அதிகாலை கைது செய்தனர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட அவர், அரசு  மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.

மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை: மயிலாடுதுறை பகுதி வாழ் மக்களின் நீண்ட கால கோரிக்கைகளுக்கு உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள எம்எல்ஏ-விடம் நாகை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என தமிழர் உரிமை மீட்பு இயக்கத்தினர் சுவரொட்டிகள் மூலம் வலியுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டாச்சு... தண்ணீர் இல்லாமல் தெப்பத் திருவிழா நடைபெறுமா?

இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்

மண்டல அலுவலா்கள், பறக்கும் படை நிலையான கண்காணிப்பு குழுவினருக்கான பயிற்சி கூட்டம்

பிரதமா் மோடி இன்று இஸ்ரேல் பயணம்!

புற்றுநோய் மரபணு வரைபடம்!

SCROLL FOR NEXT