கலசலிங்கம் பல்கலை.யில் இந்திய ஆட்டோ மோட்டிவ் பொறியாளர்கள் அமைப்பின் 9-வது தேசிய மாணவர் மாநாடு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆட்டோ மோட்டிவ் பொறியாளர்கள் அமைப்பின் 9-வது தேசிய மாணவர் மாநாடு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்கலசலிங்கம் பல்கலை.யில் இந்திய ஆட்டோ மோட்டிவ் பொறியாளர்கள் அமைப்பின் 9-வது தேசிய மாணவர் மாநாடு
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆட்டோ மோட்டிவ் பொறியாளர்கள் அமைப்பின் 9-வது தேசிய மாணவர் மாநாடு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் இந்திய ஆட்டோ மோட்டிவ் பொறியாளர்கள் அமைப்பின் 9-வது தேசிய மாணவர் மாநாடு வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற்றது.
மாநாட்டை கலசலிங்கம் பல்கலைக்கழகமும் இந்திய ஆட்டோ மோட்டிவ் பொறியாளர்கள் கழகமும் இணைந்து நடத்தின. மாநாட்டிற்கு வேந்தர் க.ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். துணை வேந்தர் ச.சரவணசங்கர் வரவேற்றார். மாணவர் மாநாட்டின் தலைவர் டாக்டர் டி.முருகானந்தம் இரு நாள் மாநாட்டின் நிகழ்ச்சிகள் குறித்து விளக்கினார். இந்திய ஆட்டோ மோட்டிவ் பொறியாளர் துறையின் தலைவர் என்.பாலசுப்பிரமணியன் மாநாட்டைத் தொடங்கி வைத்து உரையாற்றினார். ரினால்ட் நிஸான் தொழில் நுட்பத்துறை இந்திய வணிக மையத்தின் துணைத் தலைவர் நோபோரு ஓபா சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது: மாணவர்களின் வெற்றி, அவர்களின் அறிவுத் திறமை, திறமையை வெளிப்படுத்துதல், போட்டி போட்டு வெற்றியடையும் திறமை ஆகிய இந்த மூன்றில்தான் உள்ளது. மாணவர்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும்போது வெளிப்படையான ஆற்றல் அறிந்து கொள்ள வேண்டும். போட்டி போடும் திறமையுடன், மற்றவர்களை ஊக்கப்படுத்தும் திறமையுடன் பணியாற்ற வேண்டும்.
இதன்படி நேர் கோட்டில் மாணவர்களுடைய அன்றாட பாடதிட்டமும், அதில் நுண்ணிய அறிவையும் வளர்த்துக் கொண்டு செல்ல வேண்டும். அதற்கு நேர் எதிர் கோட்டில் ஆழமான அறிவினை தொழிற்சாலை அனுபவத்தின் மூலமாக அறிந்து தொழிற்சாலைகளை நடத்திச் செல்ல வேண்டும் என்றார் அவர். நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள், தொழிற்சாலை வல்லுநர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இரு நாள் மாநாட்டில் ஆட்டோமொபைல் துறை வடிவமைப்பு, மென்பொருள், வணிகத் திட்டம், வினாடி-வினா, தகடு கணினி, மில்லிங் இயந்திரம், பிளாஸ்டிக் தொழில்துறை முறைகள், இயந்திரவியலும் மின்னணுவியலும் இணைந்த பயன்பாடுகள், தொழிற்சாலைத் துறை திரையரங்கம் போன்ற பல நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்திய ஆட்டோமோட்டிங் துறை அமைப்பின் கலசலிங்கம் பல்கலைக்கழக ஆலோசனை பேராசிரியர் எம்.உதயகுமார் நன்றி கூறினார்.