சாதனையாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்
சாதனையாளர் விருதி பெற விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அன்னை ஓவியக் கலைக்கூடம் தெரிவித்துள்ளது.
சாதனையாளர் விருதி பெற விண்ணப்பிக்கலாம் என புதுச்சேரி அன்னை ஓவியக் கலைக்கூடம் தெரிவித்துள்ளது.
அதன் செயலர் எம்.ஜெயராம் வெளியிட்ட அறிக்கை: அன்னை ஓவியக்கலைக்கூடம் சார்பில் 2015-ம் ஆண்டுக்கான சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது. இதில் மாணவ, மாணவியர், மற்றும் தனி நபர்கள் புரிந்த சாதனைகள் கருத்தில் கொள்ளப்படும். ஓவியம், இயல், இசை, கவிதை, நாடகம், வாய்ப்பாட்டு பமற்றும் அனைத்துத் துறையினரும் கலந்து கொள்ளலாம்.
தாங்கள் பெற்ற சான்றிதழ் நகல் மற்றும் விவரங்களை 15 நாள்களில் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.முகவரி: வண்ண அருவி கலைக்கூடம், 11-அ, செயின்ட் தெரேஸ் வீதி, புதுச்சேரி-1.தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன்: 9486018721.