சூலூர் அருகே 2 குழந்தைகளுடன் தாய் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை
சூலூர் அருகே இரண்டு குழந்தைகளும், தாயும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய செய்திகள்சூலூர் அருகே 2 குழந்தைகளுடன் தாய் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை
சூலூர் அருகே இரண்டு குழந்தைகளும், தாயும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூலூர் அருகே இரண்டு குழந்தைகளும், தாயும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுரியை சேர்ந்தவர் எழிலரசி (22), கோவை, மதுக்கரையை சேர்ந்தவர் நவீன் குமார் (24) இவர்கள் இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்ரீவர்த்தனி (4), தாரணி ஸ்ரீ (1) என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இன்று காலை தாயும், இரண்டு குழந்தைகளும் கீழ்நிலை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து இறந்து கிடந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சூலூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தண்ணீர் தொட்டிக்குள் விழுந்ததற்கான காரணம் என்ன என்பதை கணவரான நவீன் குமாரை அழைத்துச் சென்று விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையா, தற்கொலையா என்ற பாணியில் விசாரித்து வருகின்றனர்.