தற்போதைய செய்திகள்

விருதுநகர் மாவட்டத்தில் 897 பேருக்கு ரூ.4.29 கோடியில் தாலிக்கு தங்கம்: அமைச்சர்கள் வழங்கினார்கள்

விருதுநகர் மாவட்டத்தில் 897 பயனாளிகளுக்கு ரூ.4.29 கோடியில் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவித் தொகை உள்ளிட்டவைகளை செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க திட்ட அமைச்சர்

எஸ். பாண்டியன்

விருதுநகர் மாவட்டத்தில் 897 பயனாளிகளுக்கு ரூ.4.29 கோடியில் தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவித் தொகை உள்ளிட்டவைகளை செய்தி மற்றும் சிறப்புத் திட்ட செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் வழங்கினார்கள்.

விருதுநகர் மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஆட்சியர் வே.ராஜாராமன் தலைமை வகித்தார். இதில், சிறப்பு விருந்தினராக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்று பேசுகையில், உலகளவில் தமிழகத்தில் தான் பொதுமக்களக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, இலவச பஸ்பாஸ் உள்ளிட்ட 14 வகையான  திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வீடுகளிலும் ஏதாவது ஒரு திட்டத்தில் பொதுமக்கள் பயன்பெற்று வருவதாக அவர் தெரிவித்தார்.

செய்தி மற்றும் சிறப்பு செயலாக்க திட்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசுகையில், ஏழை எளிய மக்கள் பயனடையும் வகையிலும், அவர்களின் குடும்ப வருமானத்தை பெருக்கும் வகையிலும் கறவை மாடுகள், ஆடுகள் வளர்க்கும் திட்டம், சூரிய ஒளியுடன் கூடிய பசுமை குடியிருப்பு திட்டம் ஏராளமான திட்டத்தில்  பயனடைந்து வருகின்றனர். அதேபோல், இந்நிகழ்ச்சி மூலம் ஏழை பெண்களின் திருமணத்திற்கு 10-ம் வகுப்பு முடித்த 494 பேருக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம தங்கமும், பட்டம் மற்றும் பட்டயம் பெற்ற 403 பேருக்கு ரூ.50 ஆயிரமும், 4 கிராம் தங்கமும் என மொத்தம் 897 பயனாளிகளுக்கு ரூ.4.29 கோடியில் வழங்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

பின்னர் நடந்த நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம், உதவித் தொகைக்கான காசோலை ஆகியவைகளை அமைச்சர்கள் வழங்கினார்கள். இதில், விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் க.பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் முனுசாமி, மாவட்ட ஊராட்சி தலைவர் அ.வசந்தா, ஒன்றியக்குழு தலைவர்கள் கி.கலாநிதி(விருதுநகர்), வேலாயுதம்(சாத்தூர்), காளிமுத்து(ஸ்ரீவில்லிபுத்தூர்), சுப்பிரமணியன்(சிவகாசி), நகராட்சி தலைவர் மா.சாந்தி, மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஐ.பாண்டியம்மாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் புகழேந்தி, புதுவாழ்வு திட்ட அலுவலர் சண்முகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT