முகப்பு
தற்போதைய செய்திகள்

அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே மோதல்: 5 மாணவர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 5 மாணவர்கள்

தற்போதைய செய்திகள்

அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே மோதல்: 5 மாணவர்கள் கைது

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 5 மாணவர்கள்

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:56 AM
பகிர்:

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அரசுப் பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கூமாப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வகுப்பு படித்து வருபவர் எஸ்.கொடிக்குளம் கீழத்தெரு அய்யாக்காளை மகன் பவித்ரபாண்டி (16). கூமாப்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் மகன் அப்துல் ரகுமான் (17), அயூப்கான் மகன் அசாருதீன் (17), உமர்கத்தாப் மகன் முகமது தாவுபிக் (17). இவர்கள் அனைவரும் இப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்கள்.

எஸ்.கொடிக்குளம் கண்மாய்க்கு அருகில் உள்ள கூமாப்பட்டி பள்ளிவாசலுக்குச் சொந்தமான கிணற்றின் அருகில் 4-ம் தேதி யாரோ அசுத்தம் செய்துள்ளார்கள். இது தொடர்பாக பவித்ரபாண்டிக்கும் அப்துல் ரகுமானுக்கும் முன்விரோதம் இருந்துள்ளது.புதன்கிழமை வகுப்பறையில் இருந்த பவித்ரபாண்டியை, அப்துல் ரகுமான், அசாருதீன், தாவுபிக் ஆகியோர் சேர்ந்து ஆபாசமாகப் பேசி, போகவிடாமல் தடுத்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்களாம்.

இது குறித்து கூமாப்பட்டி காவல் நிலையத்தில் பவித்ரபாண்டி கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவர்கள் அப்துல் ரகுமான், அசாருதீன், தாவுபிக் ஆகியோரைக் கைது செய்தனர்.

மேலும் இருவர் கைது:

பிளஸ் 2 மாணவர் அப்துல் ரகுமான் புதன்கிழமை பகலில் பள்ளியின் கேட் அருகே வரும்போது, பவித்ரபாண்டி மற்றும் இவருடன் படிக்கும் பாண்டி மகன் மணிகண்டன் (16) ஆகியோர் சேர்ந்து முன்விரோதத்தில் அப்துல்ரகுமானை ஆபாசமாகப் பேசி, அடித்து கொலை மிரட்டல் விடுத்தார்களாம். இது குறித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பவித்ரபாண்டி, மணிகண்டன் ஆகியோரைக் கைது செய்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →