முகப்பு
தற்போதைய செய்திகள்

செம்மரக்கட்டை கடத்தல் வழக்கு :  டிஎஸ்பிக்கு 23ம் தேதி வரை காவல் நீட்டிப்பு

செம்மர கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிஎஸ்பியின் நீதிமன்ற காவல் ஜூலை 23-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:56 AM
பகிர்:

செம்மர கட்டை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டிஎஸ்பியின் நீதிமன்ற காவல் ஜூலை 23-ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆம்பூர் அருகே மாதனூர் பாலூரை சேர்ந்த பா.ம.க பிரமுகர் சின்னபையன் செம்மரக்கட்டை தகராறில் கொலை செய்யப்பட்டார்.  கொலை வழக்கு தொடர்பாக வெங்கடேசன், தங்கராஜ், பெருமாள், சத்தியமூர்த்தி ஆகிய 4 பேரையும் ஆம்பூர் கிராமிய காவல் நிலைய போலீஸார் கைது செய்தனர்.  மேலும் செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் வேலூர் அலமேலுரங்காபுரத்தை சேர்ந்த நாகேந்திரன் -  ஜோதிலட்சுமி தம்பதியை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தியதில் கடத்தலில் வேலூர் கலால் டிஎஸ்பி தங்கவேல் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.  

நாகேந்திரன் வீட்டிலிருந்து 3.5 டன் செம்மர கட்டைகள், ரூ.32 இலட்சம் ரொக்கம், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 3 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.  அதைத் தொடர்ந்து டிஎஸ்பி தங்கவேலு தலைமறைவானார். டிஎஸ்பி தங்கவேலு கூறியதின் பேரில் கொலை செய்யப்பட்ட பாமக பிரமுகர் சின்னபையனின் கோழி பண்ணையிலிருந்த செம்மரக் கட்டைகளை லாரியில் கடத்திய காஞ்சிபுரத்தை சேர்ந்த கோபு, லோகநாதன், மாரியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.  இவர்கள் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.   போலீஸôரின் தீவிர தேடுதலுக்கு பிறகு தலைமறைவான டிஎஸ்பி தங்கவேல் காட்பாடியில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அதைத்தொடர்ந்து டிஎஸ்பி தங்கவேல் ஜாமின் கேட்டு ஆம்பூர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  ஆனால் அவருடைய மனு தள்ளுபடி செய்யப்பட்டது.  அதைத்தொடர்ந்து வேலூர் மாவட்ட நீதிமன்றத்திலும் அவரது ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டு நீதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் டிஎஸ்பி தங்கவேல் மற்றும்  கோபு, லோகநாதன், மாரியப்பன் ஆகிய 4 பேரின் நீதிமன்ற காவல் நிறைவடைவதையொட்டி அவர்கள் ஆம்பூர் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்டனர்.  நீதிபதி ஆனந்தராஜ்  4 பேரின் நீதிமன்ற காவலை வருகிற ஜூலை 23ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.  அதைத் தொடர்ந்து டிஎஸ்பி  தங்கவேல் உள்ளிட்ட 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லபட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.