ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை மருத்துவமனை வளாகம் அருகே
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்கம் சார்பில் வியாழக்கிழமை மருத்துவமனை வளாகம் அருகே உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
மத்திய அரசு 7-வது ஊதியக் குழு பரிந்துரையை துரிதமாக அமுல்படுத்த வேண்டும்.
மருத்துவர்கள், பேராசிரியர்களுக்கு உள்ளது போல் ஊழியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு வழங்க வேண்டும்.
ஊழியர்கள் பணிநிலை சீரமைப்பை விரைவாக முடித்து அனைத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமை தாங்கினார்.