சாத்தூர் அருகே ஆட்டோவில் கடத்திய 150 கிலோ சல்பர் மருந்து பறிமுதல்
சாத்தூர் அருகே அனுமதியின்றி ஆட்டோவில் கடத்திச் சென்ற பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான 150 கிலோ சல்பர் மருந்தை சனிக்கிழமை இரவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் அருகே அனுமதியின்றி ஆட்டோவில் கடத்திச் சென்ற பட்டாசு தயாரிக்க பயன்படும் மூலப்பொருளான 150 கிலோ சல்பர் மருந்தை சனிக்கிழமை இரவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சாத்தூர் வெம்பக்கோட்டை சாலையில் மாலை நேரங்களில் ரேசன் அரிசி வாகனங்களில் கடத்தப்படுவதாக வட்ட வழங்கல் துறை அதிகாரிக்கு ரகசிய தகவல் வந்ததாம்.
அதன் அடிப்படையில் சிவகாசி வட்ட வழங்கல் அலுவலர் கிருஷ்ணவேனி தலைமையில் அதிகாரிகள் சாத்தூர்-வெம்பக்கோட்டை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டனர். அதன் உள்ளே பட்டாசுகள் தயார் செய்ய பயன்படும் மூலப்பொருளான சல்பர் மருந்து 3 சாக்கு பைகளில் இருந்தது ஆய்வில் தெரியவந்தது.
மேலும், அவர்கள் குறித்து விசாரணை செய்ததில் சாத்தூர் அருகே உள்ள ராமலிங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்த கனகராஜ்(52), குமார்(32) என்பது தெரியவந்தது.
உடனே சல்பர் மருந்தையும் ஆட்டோவையும் பறிமுதல் செய்து அதிகாரிகள் வெம்பக்கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிந்து கனகராஜ் மற்றும் குமார் ஆகியோரை கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Advertisement