வாசகர்களுக்கு நன்றி! நன்றி!! நன்றி!!!
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் செயல்பட்டு வரும் தினமணி டாட் காம், சமீபமாக பல மாற்றங்களையும், பல புதிய பகுதிகளையும் கண்டு வருகிறது.
வாசகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் செயல்பட்டு வரும் தினமணி டாட் காம், சமீபமாக பல மாற்றங்களையும், பல புதிய பகுதிகளையும் கண்டு வருகிறது. இது குறித்து வாசகர்களின் கருத்துகளையும், எதிர்பார்ப்புகளையும் தெரிந்துகொள்ள, வேண்டுகோள் விடுத்தோம்.
எங்கள் வேண்டுகோளை ஏற்று வாசகர்கள் நிறைய கருத்துகளையும் ஆலோசனைகளையும் அனுப்பி எங்களை திக்குமுக்காடச் செய்துவிட்டனர். கருத்து தெரிவித்த அனைவருக்கும் எங்களது நன்றி. வாசகர்களின் கருத்துகளைக் கருத்தில்கொண்டு, வெகு விரைவில் அவர்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிட தினமணி டாட் காம் நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
வாசகர்கள் தங்களது மேலான தொடர்ந்த ஆதரவை, தினமணி டாட் காமுக்கு வந்து செய்திகளையும் சிறப்புப் பகுதிகளையும் படித்து தங்கள் கருத்துகளைத் பதிவு செய்வதன் மூலம் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
Advertisement
நன்றி.