தற்போதைய செய்திகள்

மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்க கோரி மத்திய அமைச்சரிடம் மனு

மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்கக் கோரி மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் நாடார் மஹாஜன சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

எஸ். பாண்டியன்

மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்கக் கோரி மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவிடம் நாடார் மஹாஜன சங்கத்தின் நிர்வாகிகள் கோரிக்கை மனுவை அளித்தனர்.

விருதுநகர் கேவிஎஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காமராஜர் 113-வது பிறந்த நா்ள் விழா கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் வெங்கய்யாநாயுடு, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது, மதிய உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயர் வைக்க வலியுறுத்தும் கோரிக்கை மனுவை நாடார் மஹாஜன சங்கத்தின் தலைவர் முத்துச்சாமி, பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் மத்திய அமைச்சரிடம் அளித்தனர்.

மேலும், இக்கோரிக்கை குறித்து பிரதமரிடம் நேரில் எடுத்துரைப்பதாக சங்க நிர்வாகிகளிடம் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நாடார் வரலாறு குறித்த குறுந்தகடையும் சங்கத்தினர் வெளியிட அதையும் மத்திய அமைச்சரும், பொரூளாதார நிபுணர் மற்றும் பத்திரிக்கையாளருமான எஸ்.குருமூர்த்தி ஆகியோர்  பெற்றுக் கொண்டனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமான 8 மாதங்களில் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் ’நாம்’ இயக்க மாநாட்டில் வலியுறுத்தல்

தில்லியில் காணாமல்போன 1,850 கைப்பேசிகள் மீட்பு

பழனியில் இரட்டை மாட்டுவண்டிப் பந்தயம்

SCROLL FOR NEXT