சதுரகிரி மகாலிங்கம் கோவில் திருவிழா: தடுப்பு கம்பி வேலி அமைக்க கோரிக்கை
விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதையொட்டி அவர்களின் பாதுகாப்பிற்காக சில இடங்களில்
தற்போதைய செய்திகள்சதுரகிரி மகாலிங்கம் கோவில் திருவிழா: தடுப்பு கம்பி வேலி அமைக்க கோரிக்கை
விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதையொட்டி அவர்களின் பாதுகாப்பிற்காக சில இடங்களில்
விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் வரும் ஆடி அமாவாசையை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவதையொட்டி அவர்களின் பாதுகாப்பிற்காக சில இடங்களில் தடுப்பு கம்பி வேலிகளும், இரு இடங்களில் ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆ.காமராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனுவின் விவரம்:
ஆடி அமாவாசை திருவிழாவிற்காக இரு மாவட்ட நிர்வாகமும் இணைந்து சிறப்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கெண்டு வருவது பாராட்டுக்குரியது.பக்தர்களின் நிரந்தர பாதுகாப்பு கருதி, குதிரை ஊற்று ஆறு, பிலாவடி கருப்பசாமி கோவில் ஆறு ஆகியவை குறுக்கிட்டும் இடத்தில் பாலம் அமைக்க வேண்டும். வழுக்குப்பாறை, சங்கிலிப்பாறை, வனதுர்க்கை பச்சரிசிப் பாறை, நாவல் ஊற்று ஆகிய இடங்களில் தடுப்பு கம்பி வேலி அமைக்க வேண்டும்.
மேலும் பௌர்ணமி, அம்மாவாசை, பிரதோஷம் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் ஏராளமான பக்தர்கள் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு வருவதால், அந்த சமங்களில் குதிரை ஊற்று, சங்கிலிப்பாறை, சதுரகிரி கோவில், தாணிப்பாறை அடிவாரம் ஆகிய இடங்களில் மருத்துவக் குழுக்களை தயாராக வைத்திருந்து முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.