தற்போதைய செய்திகள்

காரைக்கால் இந்திய கடலோரக் காவல்படைக்கு 2 நவீன ரோந்துக் கப்பல் அர்ப்பணிப்பு

காரைக்காலில் உள்ள இந்திய கடலோரக் காவல்படையின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில், 2 நவீன ரோந்துக் கப்பல் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. எஸ்.பி.சர்மா கலந்துகொண்டார்.

என்.எஸ்.செல்வமுத்துக்குமாரசாமி

காரைக்காலில் உள்ள இந்திய கடலோரக் காவல்படையின் கட்டுப்பாட்டில் இயங்கும் வகையில், 2 நவீன ரோந்துக் கப்பல் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. எஸ்.பி.சர்மா கலந்துகொண்டார்.

இந்திய கடலோரக் காவல் படைக்கு சி -415 மற்றும் சி -416 என்ற 2 ரோந்துக் கப்பல் அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி கடலோரக் காவல் படை கிழக்குப் பிராந்திய அமைப்பு மூலம் காரைக்கால் மார்க் துறைமுக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்திய ஐ.ஜி. எஸ்.பி.சர்மா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, கப்பல்களை இயக்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது,  இந்திய கடலோரக் காவல்படை உலகின் 4-வது பெரிய படையாக விளங்குகிறது.  மிகுந்த ஈடுபாட்டுடன் கடலோரக் காவல்படையினர் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.  கடலோரப் பாதுகாப்புப் பணிக்கு அதிக கவனம் செலுத்திவருகிறோம்.  கடலோரக் காவல்படையில் புதிய தொழில்நுட்பங்களை புகுத்துகிறோம். காரைக்கால் மையத்துக்கென 3 கப்பல்கள் தரப்பட்டுள்ளன. காரைக்கால் மார்க் துறைமுகம், கடலோரக் காவல்படை கப்பல்களை நிறுத்திக்கொள்ள 75 மீட்டர் நீளமுள்ள தளம் தந்துள்ளது.  இதற்காக மாதம் ரூ.4.5 லட்சம் வாடகை செலுத்துகிறோம்.

இப்போது காவல்படைக்கு தரப்படும் கப்பல்கள் யாவும் அலுமினியத்தால் உருவாக்கப்பட்டவை என்பதால், எடை குறைவு, அதிவேக இயக்கம் உள்ளிட்ட சாதகங்களை தருகிறது.  கடந்த 35 ஆண்டுகளை ஒப்பிடும்போது, கடலோரக் காவல்படை இப்போதுதான் விரிவான வளர்ச்சியை நோக்கி செல்கிறது. காரைக்கால் மையத்துக்கென தரப்பட்டுள்ள, 2 கப்பல்களின் வீரர்கள் செம்மையான பணிகளை செய்வார்கள் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் கடலோரக் காவல்படையின் காரைக்கால் மைய கமாண்டன்ட் உதல்சிங், 2 கப்பல்களின்  உதவி கமாண்டன்ட் சுபாஷ் கபூர் (சி-415), பி.சரண் (சி-416)  ஆகியோர் கலந்துகொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களாக, காரைக்கால் மாவட்ட நீதிபதி வைத்தியநாதன், காரைக்கால் மாவட்ட முதுநிலைக் காவல் கண்காணிப்பாளர் ஏ.கே.கவாஸ், நாகை மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி, காரைக்கால் துறைமுக நிர்வாக பொதுமேலாளர் (திட்டம்) ஜி.ராஜேஷ்வர்ரெட்டி, துறைமுக மக்கள் தொடர்பு அலுவலர் ஏ.ராபர்ட்ரோக் மற்றும் கப்பல் தயாரிப்பு நிறுவனமான எல்000க்ஷடி நிறுவன துணைத் தலைவர் நாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.  முன்னதாக இரு கப்பல்களின் உதவி கமாண்டன்ட்டுகளுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டது. கப்பல் வீரர்களுடன் எஸ்.பி.சர்மா, கப்பல்களுக்குள் சென்று பார்வையிட்டார்.

புதிய ரோந்துக் கப்பல் செயல்பாடுகள் :  சி-415, சி.416 என்ற இரண்டு ரோந்துக் கப்பல்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இதனை எல் 000க்ஷ டி நிறுவனம் டிசைன் செய்து தயாரித்துள்ளது. ஒரு கப்பல் 27.80 மீட்டர் நீளமுடையது. 101 டன் எடை கொண்டது. 45 நாட்டிக்கல் மைல் வேகத்தில் இயங்கக்கூடியது. ஒவ்வொரு கப்பலும் 2 டீசல் என்ஜின் கொண்டது. கண்காணித்தல், தேடுதல், மீட்பது, கடல் மாசடையாமல் பாதுகாக்குóம நடவடிக்கைகளை எடுத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு இக்கப்பல் பயன்படுத்தப்படவுள்ளது. துணை கமாண்டன்ட் தலைமையில் 12 வீரர்கள் ஒரு கப்பலில் பணியாற்றுவர். அதிக திறன் கொண்ட இயந்திரத் துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் கப்பலில் உள்ளடக்கப்பட்டுள்ளது..

1.நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ரோந்துக் கப்பல்கள்.

2. கப்பல்களை ரிமோட் மூலம் இயக்கிவைக்கிறார் கடலோரக் காவல்படை கிழக்குப் பிராந்திய கமாண்டன்ட் எஸ்.பி.சர்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT