முகப்பு
தற்போதைய செய்திகள்

ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேமுதிகவுடன் பேச்சு நடத்தி வருகிறோம்: பொன்.ராதாகிருஷ்ணன்

பண்ருட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:41 AM
பகிர்:

பண்ருட்டியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து தேமுதிகவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். அக்கட்சியின் முடிவுக்குப் பின் பா.ஜ.க தன் முடிவை அறிவிக்கும் என்று கூறினார்.

மேலும் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-- போக்குவரத்துக்கு பயனற்ற நிலையில் உள்ள விக்ரவாண்டி - கும்பகோண்ம் தேசிய நெடுஞ்சாலை வரும் ஆண்டு சரி செய்யப்படும், சென்னையில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை மகாபலிபுரம், புதுச்சேரி, வழியாக கன்னியாகுமரிக்கு 4 வழிச் சாலை அமைப்பதற்கான என் விருப்பத்தை தமிழக அரசிடம் தெரிவித்துள்ளேன்.

தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை அமைக்கப்படும். ஐ.ஐ.டி. மாணவர்கள் விவகாரத்தில் அரசியல் கட்சிகள், அமைப்புகள் மறைமுகமாக தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்துச் சுதந்திரத்துக்கு பா.ஜ.க முழு ஆதரவு அளிக்கிறது.

தமிழகத்தில் லஞ்சம், ஊழலற்ற நேர்மையான அரசு அமைய வேண்டும். அப்படியான ஒரு அரசு 2016 தேர்தலில் அமைய பா.ஜ.கவை மக்கள் ஆதரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →