முகப்பு
தற்போதைய செய்திகள்

மாயமான குட்டி விமானத்தை தேடும் பணியில் கடலோரக் காவல்படையின் கப்பல்கள்

கடலூரிலிருந்து ரோந்துப் பணிக்கு புறப்பட்ட குட்டி விமானம் கடல் பகுதியில் மாயமானது. இதனை தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:43 AM
பகிர்:

கடலூரிலிருந்து ரோந்துப் பணிக்கு புறப்பட்ட குட்டி விமானம் கடல் பகுதியில் மாயமானது. இதனை தேடும் பணியில் இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இந்திய  கடலோரக் காவல்படைக்கு சொந்தமான டோர்னியர் என்கிற குட்டி விமானம் கடலூரிலிருந்து தினமும் நாகப்பட்டினம் வரை ரோந்துப் பணியில் ஈடுபடுவது வழக்கம். இதன்படி கடலூரிலிருந்து புறப்பட்டு திங்கள்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொடர்ந்து சிக்னல் கிடைக்காமல் போனது. இதனால் இந்த விமானம் மாயமாகியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

இதுகுறித்த காரைக்காலில் உள்ள கடலோரக் காவல்படையின் கமாண்டர் அலுவலகத்துக்கு கிடைத்த தகவலின்பேரில், அண்மையில் ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்ட சி-415 மற்றும் சி-416, அமேயா என்கிற பெரிய ரோந்துக் கப்பல்கள், தீவிரமான தேடுதல் பணியில் ஈடுபடுத்த அனுப்பிவைக்கப்பட்டதாக கடலோரக் காவல்படை வட்டாரம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது. மேலும் இப்பணியில் 8 கப்பல்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மாயமான விமானத்தில் 2 விமானிகள் உள்ளிட்ட 3 பேர் இருந்துள்ளனர். விமானம் மாயமாகியிருப்பது தொடர்பாக,  தீவிரவாத ஒத்திகையாக நடத்தப்படும் ஆபரேஷன் ஆம்லா என்பதும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக காரைக்கால் காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. விமானம் மாயமான இடம் தெளிவாக தெரியவரவில்லை.  விமானம் மாயமானது குறித்த முழு விவரங்கள் சென்னையில் இன்று 10.30 மணிக்குப் பிறகு கடலோரக் காவல்படை தலைமையகம் தகவல் தெரிவிக்குமென செய்திகள் தெரிவிக்கின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →