விருதுநகர் அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை
விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் தூக்கிட்டும், விஷம் குடித்தும் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர் அருகே குடும்ப பிரச்னையால் தூக்கிட்டும், விஷம் குடித்தும் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
விருதுநகர் லட்சுமி காலனியைச் சேர்நதவர் ஜோசப் என்பவரின் மனைவி மாரீஸ்வரி(43). இவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஈரோடு பகுதியில் நூற்பாலையில் வேன் ஓட்டுநராக பணியாற்றி வந்தாராம். அப்போது, ஏற்கனவே திருமணமான பாண்டியம்மாள் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாம். அதோடு, கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு அவரை அழைத்து வந்து விருதுநகர் கிழக்கு பாண்டியன் காலனியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தாராம். இது முதல் மனைவிக்கு தெரியவந்ததை தொடர்ந்து பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செவ்வாய்கிழமை இரவு வீட்டிற்கு வந்து சாப்பிட்டு படுக்கைக்குச் சென்றாராம். அதையடுத்து சிறிது நேரத்திற்கு பின் பாண்டியம்மாள் எழுந்து பார்க்கும் போது வீட்டிற்குள்ளே தூக்கிட்டு உயிரிழந்த நிலையில் கிடந்தாராம். இது குறித்து முதல் மனைவிக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதைத்தொடர்து மாரீஸ்வரி விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஜோசப் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Advertisement
அரசு பேருந்து ஓட்டுநர் விஷம் குடித்து சாவு:
விருதுநகர் அருகே ரோசல்பட்டியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(58). இவர் விருதுநகர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வந்தாராம். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கேன்சர் நோயால் அவதிப்பட்டு வந்ததால் வி.ஆர்.எஸ் பெற்றுக் கொண்டு வீட்டில் இருந்து வந்தார். மேலும், கேன்சரால் அவதிப்பட்டதோடு, வயிற்று வலியும் இருந்துள்ளது. இதனால் மனம் வெறுத்த நிலையில் அரசு பள்ளிக்கு எதிரே உள்ள பகுதியில் செவ்வாய்கிழமை மாலையில் விஷம் குடித்து மயங்கி கிடந்தாராம். இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து உடனே உயிருக்கு ஆபத்தான நிலையில் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்த நிலையிலும் பலனின்றி நள்ளிரவில் உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது மகன் சரவணன்(27) பாண்டியன் நகர்க காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.