முகப்பு
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர் பணி: அண்ணாமலைப் பல்கலையில் நடைபெற்ற நேர்காணலில் 80 பேர் தேர்வு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற நடைபெற்ற நேர்காணலில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழியல்துறை

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:47 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல்துறையில் சிங்கப்பூர் பள்ளியில் தமிழாசிரியர்களாக பணியாற்ற நடைபெற்ற நேர்காணலில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தமிழியல்துறை தலைவர் அரங்க.பாரி தெரிவித்தார்.

சிங்கப்பூர் பள்ளிகளில் தமிழாசிரியர்களாக பணியாற்ற முதன் முறையாக அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழியல் துறையில் வேலைவாய்ப்பு முகாம் ஜூன் 15, 16 தேதிகளில் நடைபெற்றது. நேர்காணலில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, நாகப்பட்டினம் மாவட்டங்களிலிருந்து இளங்கலை மற்றும் முதுகலை தமிழில் பட்டம் பெற்றவர்கள் சுமார் 400 பேர் பங்கேற்றனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கு வருகை தந்த சிங்கப்பூர் எஜூகேர் (Educare) நிறுவனத்தைச் சேர்ந்த ஜோய்ப் ஏஞ்ச் (Joype Ange) தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு முதல் சுற்று நேர்காணலை நடத்தியது. இந்த நேர்காணலில் முதல் சுற்றில் 80 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என பல்கலைக்கழக தமிழியல்துறை தலைவர் அரங்க.பாரி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.