முகப்பு
தற்போதைய செய்திகள்

விருதுநகர் அருகே ஓய்வுபெற்ற மின்வாரிய அதிகாரி வீட்டில் 33 சவரன் நகை திருட்டு

விருதுநகர் அருகே ஓய்வு பெற்ற மின்வாரியத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து பூஜையறையில் இருந்த ரூ.3.30 லட்சம் மதிப்பிலான 33 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து

Updated On : 18 ஜூன், 2015 at 5:15 PM
பகிர்:

விருதுநகர் அருகே ஓய்வு பெற்ற மின்வாரியத்துறை அதிகாரி வீட்டின் பூட்டை உடைத்து பூஜையறையில் இருந்த ரூ.3.30 லட்சம் மதிப்பிலான 33 சவரன் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

விருதுநகர் அருகே உள்ள சத்திரரெட்டியபட்டி இ.பி. காலனியில் முதல் தெருவைச் சேர்ந்தவர் சங்கரநாராயணன்(65). இவர் மின்வாரியத்துறையில் கண்காணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றவராவர். இவர் கடந்த 12-ம் தேதி வீட்டை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் பெங்களூருவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றாரார்களாம்.

இந்நிலையில், புதன்கிழமை மாலையில் இவரது பக்கத்து குடியிருப்பைச் சேர்ந்த கதிரேசன் என்பவர் வீட்டின் கிரீல் கேட் பூட்டு உடைக்கப்பட்டு கதவும் திறந்து கிடப்பதாக செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்தாராம். இதைத் தொடர்ந்து உடனே பெங்களூருவில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு விருதுநகருக்கு வியாழக்கிழமை காலையில் வந்து பார்த்துள்ளார். அப்போது, வீடு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதையடுத்து உள்ளே சென்று பார்க்கையில் பூஜையறையில் பெட்டியில் பாதுகாப்பாக வைத்திருந்த தங்க காசு உள்ளிட்ட 33 சவரன் நகைகளை தான் யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

Advertisement

இது குறித்து உடனே பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு போலீஸார், கைரேகை நிபுணர்கள் மற்றும்  மோப்ப நாயுடன் விரைந்து வந்து ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து வீட்டுக் கதவை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.