இலுப்பூர்: வீட்டில் தீ காயங்களுடன் பள்ளி மாணவி சடலம்
இலுப்பூர் அண்ணா நகரில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தீ காயங்களுடன் பள்ளி மாணவி சடலமாக கிடந்ததை தொடர்ந்து, பிரேதத்தை கைபற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலுப்பூர் அண்ணா நகரில் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தீ காயங்களுடன் பள்ளி மாணவி சடலமாக கிடந்ததை தொடர்ந்து, பிரேதத்தை கைபற்றிய போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலுப்பூர் அருகே உள்ள அண்ணா நகரில் வசித்து வருபவர் செல்வராஜ்(42) கட்டட தொழிலாளி. இவரது மகள் பிரதீபா(16) இவர் இலுப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் 11 -ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மதியம் இவரது தாய் சித்ரா இலுப்பூர் கடை வீதிக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கியுள்ளார், பின்னர் வீட்டுக்கு வந்த போது கதவு லேசாக திறந்த நிலையில் இருந்துள்ளது. வீட்டின் உள்ளே பிரதீபா தீ காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார், சித்ராவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர். இலுப்பூர் போலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவம் இடத்திற்கு வந்த இலுப்பூர் போலிசார் எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து காவல் ஆய்வாளர் எஸ். வேலுச்சாமி வழக்கு பதிந்த விசாரணை மேற்கொண்டு வருகிறார்.