முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தேர்தல் எஸ்.மனோகரன் வெற்றி

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தேர்தலில் எஸ்.மனோகரன் அணியினர் வெற்றி பெற்றனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தேர்தலில் எஸ்.மனோகரன் அணியினர் வெற்றி பெற்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்க தேர்தல் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்தேர்தலில் தற்போதைய தலைவராக உள்ள சி.மதியழகன் தலைமையிலான அணியும், முன்னாள் தலைவர் எஸ்.மனோகரன் தலைமையிலான மற்றொரு அணியும் போட்டியிட்டன. இத்தேர்தலில் தலைவர்-1, பொதுச்செயலாளர்-1, பொருளாளர்-1, இணைப் பொதுச்செயலாளர்-1, இணைப் பொருளாளர்-1, துணைத் தலைவர்கள்-7, செயலாளர்கள்-25, செயற்குழு உறுப்பினர்கள்-60 உள்ளிட்ட 97 நிர்வாகிகள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இத்தேர்தலில் முதல் முறையாக அனைவரும் வாக்களிக்கும் வகையில் அண்ணாமலைநகர், சென்னை, திருவண்ணாமலை, ஈரோடு, மதுரை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய 7 மண்டலங்களில் உள்ள படிப்பு மையங்கள் மற்றும் அலுவலகங்களில் தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 8978 பேர் ஊழியர்கள். சிதம்பரம் அண்ணாமலைநகரில் 7223 பேரும், படிப்பு மையங்களில் 925 பேரும் வாக்களித்துள்ளனர். மொத்தம் 8148 வாக்குகள் பதிவாகின.

எஸ்.மனோகரன் தலைமையிலான அணி வெற்றி: வாக்கு எண்ணிக்கை பல்கலைக்கழக வளாகத்தில் ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு கட்டடத்தில் சனிக்கிழமை காலை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடைபெற்றது. இதில் வாக்கு எண்ணிக்கையின் போது  தொலைதூரக்கல்வி மைய படிப்பு மையங்களின் வாக்குகள் எண்ணிக்கையின் போது மனோகரன் அணி முன்னிலை இருந்தது. அதன் பின்னர் எண்ணப்பட்டு வரும் வாக்கு எண்ணிக்கையில் இரு அணிகளும் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் மாறி, மாறி முன்னிலையில் இருந்தனர்.

இறுதிசுற்றில் எஸ்.மனோகரன் 4136 வாக்குகளும், சி.மதியழகன் 3941 வாக்குகளும் பெற்றனர். 195 வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.மனோகரன் அணியினர் வெற்றி பெற்றனர். வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ஏடிஎஸ்பி திருமலைசாமி, டிஎஸ்பி எஸ்.சுந்தரவடிவேலு ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.