லிங்கா குளோபல் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழம் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நடப்பு ஆண்டு புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள லிங்கா குளோபல் பள்ளியில் சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தற்போதைய செய்திகள்லிங்கா குளோபல் பள்ளியில் சர்வதேச யோகா தினம்
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழம் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நடப்பு ஆண்டு புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள லிங்கா குளோபல் பள்ளியில் சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில், கலசலிங்கம் பல்கலைக்கழம் சார்பில் பல்கலைக்கழக வளாகத்தில் நடப்பு ஆண்டு புதியதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள லிங்கா குளோபல் பள்ளியில் சர்வதேச யோகா தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்து கலசலிங்கம் பல்கலைக்கழக வேந்தர் க.ஸ்ரீதரன் பேசுகையில் கூறியதாவது: யோகாசனம் மனதை ஒரு நிலைப்படுத்தி, நல்ல ஞானகசக்தி, நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது. மனதும் உடலும் நமது கட்டுப்பாட்டுக்குள் வருவதால், நாம் எந்தநிலையிலும், எந்த வயதிலும் வளைந்து கொடுத்துச் செல்லலாம். உடலும் வளைந்து கொடுக்கும் என்றார்.
நிகழ்ச்சியில் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சரவணசங்கர், வேந்தரின் தனிச் செயலாளர் பேராசிரியர் முரளிகிருஷ்ணன் உள்பட ஏராளமான மாணவ மாணவியர் கலந்து கொண்டனர்.